ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களின் தலைமைத்துவக் கட்சி

பாராளுமன்றத் தேர்தலில் சகல மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களும் சேர்த்து 12 பேர் இம்முறை பாராளுமன்றத்தை அலங்கரிக்கவுள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கல்குடா மீராவோடையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

இன்று நாட்டில் முழு மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களின் தலைமைத்துவக் கட்சி என்பதனைப் புரிந்து மக்கள் அதன் பக்கம் அலையலையாய் வந்து கொண்டிருக்கின்றனர். இம்முறை நடைபெறும் தேர்தல் அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும். என்பதனைச் சகிக்க முடியாத சிலர் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் சிறகுடைந்த பறவைகளுடன் தெத்தித் திரிகிறார்கள். இது அவர்களின் பகல்கனவாக மாறும் காலம் மிக விரைவில் வருகிறது என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு மாவட்டங்களில் கட்சியின் மரச்சின்னத்திலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியுடனும் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளது. அதன் பலனாக இம்முறை பலத்த வெற்றி வாய்ப்புக் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது.

எனவே இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லிம்கள் வாக்குகளை வீணாக சில்லறைக் கட்சிகளுக்கு போடுவதன் மூலம் வாக்குகளை வீணடிக்காமல் சமூகத்தின் குரலாய் ஒலிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி அதன் மூலம் சமூகத்தின் பலத்தை அதிகரிக்க அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் அதற்காக அனைவரும் முன்வாருங்கள். நாட்டையும், நம் மாகாணத்தையும், நமது மாவட்டத்தையும் சிறப்பான பாதையில் முன்னெடுத்துச் செல்வோம் அதற்காக பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைவோம் என்று முதலமைச்சர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment