கலாம் சாதாரண விஞ்ஞானி: பாக். விஞ்ஞானியின் சர்ச்சைக் கருத்து


கலாம் சாதாரண விஞ்ஞானி: பாக். விஞ்ஞானியின் சர்ச்சைக் கருத்து

அப்துல் கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானிதான் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவை உலகரங்கில் மிளிரச்செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு அந்த நாடு முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய தேசம் முழுவதும் உள்ள மக்கள் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அப்துல் கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானி தான் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞானி அப்துல் காதீர் கான் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அப்துல் கலாமின் பங்களிப்பு அதிக அளவில் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. கலாமும் இந்திய அரசும் தங்களது ஏவுகணை திட்டத்திற்கு ரஷ்ய தொழில் நுட்பத்தை அடிப்படையாக எடுத்து கொண்டன. 

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முஸ்லிம் மற்றும் மதசார்பற்ற வாக்குகளை பெற கலாமை பயன்படுத்தி கொண்டது" என்று கூறியுள்ளார். 

அப்துல் காதீர் கான் பாகிஸ்தானின் உயர்மட்ட விஞ்ஞானி ஆவார். இவர் பல்வேறு அறிவியல் திட்டங்களில் ஈடுபட்டவர். 

அணு ஆயுதங்கள் குறித்த இரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உயர்மட்ட விஞ்ஞானி என்ற பதவியில் இருந்து அப்துல் காதீர் கான் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment