"யாரிடம்தான் வேறுபாடுகள் இல்லை''

எனக்கும் எனது சகோ­தரர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவுக்கும் இடையில் முரண்­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் அதனால் ஏற்­பட்ட விரக்­தியில்
நான் ஒதுங்­கி­யி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­வதில் எந்த உண்­மையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பஷி்ல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் அவ­ரது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
எனக்கும் எனது சகோ­த­ர­ரான முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும், அதனால் நான் விரக்­தி­யுடன் இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­வதில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை. இது வேண்­டு­மென்று சிலர் பொய்ப்­பி­ர­சா­ரங்­களை வெளி­யி­டு­கின்­றனர்.
கருத்து வேறு­பா­டுகள் யாருக்கும் இருக்­கலாம். அது சகோ­த­ரர்­க­ளுக்­கி­டை­யிலும் தந்தை மக­னுக்­கி­டை­யிலும் இருக்­கலாம். அவ்­வாறு எனக்கும் எனது சகோ­த­ர­ருக்­கு­மி­டையில் கருத்து வேறு­பா­டுகள் இருக்­கலாம். அதற்­காக நாங்கள் இரு­வரும் விரி­ச­லுடன் இருக்­கின்றோம் என்­பது தவ­றான கருத்­தாகும்.
எவ்­வா­றெ­னினும் நான் இம்­முறை தேர்­தலில் போட்­டி­யி­டாமல் இருப்­ப­தற்கு அதிக கார­ணங்கள் இருக்­கின்­றன. அவற்றை தற்­போது கூறிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. என்னைப் பாதித்த ஒரு சில கார­ணங்­க­ளினால் நான் தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை.
எனினும் மக்­க­ளுக்­கான எனது சேவையை நான் வழங்குவேன். அதனை விடுத்து எனது சகோதரர் கோத்தபாயராஜபக்ஷவுடனான பிரச்சினையில் நான் ஒதுங்கியிருப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment