காலநிலையை கண்முன்னே காட்டும் கண்ணாடிப்பெட்டி.

Featured Image

அடுத்தநாள் என்ன காலநிலை இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள பலரிற்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். காரணம் அதன் மூலம் தமது மறுநாள் செயற்பாடுகளை சரியாக திட்டமிட முடியும் என்பதே ஆகும். ஆனால் அதனை தெரிந்துகொள்ள வேண்டுமெனின் காலநிலை பற்றிய செய்திகளை பார்க்கவேண்டும். இல்லையேல் எம்மிடமுள்ள கைத்தொலைபேசியில் இணையத்தின் உதவியுடன் அதனை தேடி அறிந்து கொள்ள வேண்டும். அவை யாவும் வெறும் சொற்களால் கூறப்பட்டுவிடும். எனினும் எம் கண்முன்னே, நாளை என்ன காலநிலை இருக்கும் என்பதை உயிரோட்டமாக காட்டுவதற்கு ஏதேனும் சாதனங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெளிவந்திருக்கும் புதிய கண்டுபிடிப்பினை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Tempescope என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பினை Ken Kawamoto எனும் பொறியியலாளர் உருவாக்கியுள்ளார். இச்சாதனம் உங்கள் மேசையில் வைக்கக்கூடிய அளவு மிகச்சிறிய கண்ணாடியிலான பெட்டி ஒன்றாகும். இதனால் மழைத்தூறல்கள் (Raindrops) , மின்னல் (Lightning), மேகங்கள் (Clouds) , சூரியஒளி (Sunlight) போன்ற பல காலநிலைகளை உங்கள் கண்முன்னே காட்சிப்படுத்த இயலும்.
weather-forecast-box-tempescope-ken-kawamoto-3
காலநிலைகளை கணித்து தரும் இணைய செய்நிரல்களோடு தொடர்பினை வைத்துக்கொள்ளும் இந்த பெட்டி, ஒரு குறித்த இடத்தில் மறுநாள் என்ன காலநிலை இருக்கும் என்பதை உயிரோட்டமாக கண்முன்னே காட்சிப்படுத்தும். இக்கண்டுபிடிப்பானது ஆரம்ப கட்டமாகவே வெளியிடப்பட்டுள்ளதால் பனி (Snow) காலநிலையினை மட்டும் தற்போது காண்பிக்காது. எனினும் இனிவரும் காலங்களில் அதனோடு இன்னும் பல காலநிலைகளையும் காட்டும் வகையில் இது மேருகேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார் இதன் கண்டுபிடிப்பாளர்.
weather-forecast-box-tempescope-ken-kawamoto-4
weather-forecast-box-tempescope-ken-kawamoto-2
weather-forecast-box-tempescope-ken-kawamoto-5
weather-forecast-box-tempescope-ken-kawamoto-1
weather-forecast-box-tempescope-ken-kawamoto-6
weather-forecast-box-tempescope-ken-kawamoto-7
Share on Google Plus

About mohamed hizam

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment