ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கம்சுரி என்ற கிராமத்தினுள் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சென்று, 35 பேரை சுட்டுக் கொலை செய்ததுடன் மேலும், பெண்கள், குழந்தைகள் உட்பட 172 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, இந்த சம்பவத்துக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில், கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் நகரில் உள்ள பாடசாலையொன்றில் தீவிரவாதிகள் நுழைந்து சுமார் 200 மாணவிகளை கடத்திச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment