காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகளுடன் இளைஞர்கள் சுற்றி திரிவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் பக்ரீத் தொழுகைக்கு பின்னர் நடத்தப்பட்ட பேரணியின் போது இளைஞர்கள் சிலர் ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எல்லைக்கோடு உட்பட காஷ்மீர் முழுவதும் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியுடன் இளைஞர்கள் தலைகாட்டியதால் காஷ்மீரில் அந்த அமைப்பு இருப்பதாக அர்த்தம் அல்ல என்று அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம் உயர் அதிகாரி சுப்ரதா சாகா ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி சம்பவத்தை எளிதாக எடுத்து கொள்ள கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீரில் பாதுகாப்பு கட்டமைப்பை மிகவும் வலுபடுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ரக கன்னி வெடிகளை இந்திய ராணுவம் கைப்பற்றியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவற்றை செயலிழக்க செய்த ராணுவத்தினர் ஒருவேளை அந்த கன்னி வெடிகள் வெடித்து அசம்பாவிதம் நடந்திருந்தால் 200 மீட்டர் சுற்றளவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று தெரிவித்தார்
0 comments:
Post a Comment