நானும் சங்காவும் ஓய்வு பெறுவதால் கிரிக்கெட் இறந்துவிடாது இலங்கை மண்ணில் பிரியாவிடை போட்டியில் விளையாடும் மஹேல கூறுகிறார்





''ஒவ்­வொன்­றுக்கும் ஒரு முடிவு இருக்­க­வேண்டும். குமார் சங்­கக்­கா­ரவும் நானும் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் இறந்­து­விடும் என்று கூற­மு­டி­யாது. அது தொடரும் என்­பது நிச்­சயம். நாங்கள் இரு­வரும் இவ்­வ­ளவு நீண்­ட­காலம் இலங்கை கிரிக்கெட் விளை­யாட்­டிற்­காக பங்­க­ளிப்பு வழங்­கி­ய தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றோம்'' என இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜய­வர்­தன தெரி­வித்தார்.


இலங்­கைக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை யில் ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள ஏழா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யா­னது மஹேல ஜய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் இலங்­கையில் விளை­யாடும் கடைசி சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­யாகும். எனவே இன்­றைய இந்தப் பக­லி­ரவுப் போட்டி முடிவில் சிரேஷ்ட வீரர் கள் இரு­வ­ருக்கும் உணர்­வு­பூர்வ பிரி­யா­வி­டையை ஆயி­ரக்­க­ணக்­கான இர­சி­கர்கள் வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.


இப்­போட்­டிக்கு முன்­ப­தாக பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் அமைந்­துள்ள கேட் போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் மஹேல கலந்துகொண்டு செய்­தி­யா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்தார்.


உங்­க­ளது இந்த பிரி­யா­விடைப் போட்டி உங்­களை உணர்ச்­சி­வ­சப்­படச் செய்­யுமா? எனக் கேட்­கப்­பட்­ட­போது, ''அப்­படி ஒரு நிலை ஏற்­படும் என நான் கரு­த­வில்லை. என்னைப் பொறுத்­த­மட்டில் நான் விளை­யா­டிய கடைசி டெஸ்ட் போட்­டி தான் என்னை அதி­க­ளவில் உணர்ச்­சி­வ­சப்­படச் செய்­தது. ஒரு­வேளை போட்­டியின் பின்னர் நான் உணர்ச்­சி­வ­சப்­ப­டக்­கூடும். ஏனெனில் இர­சி­கர்கள் உணர்ச்­சி­வ­சப்­பட்டு என்னை அந்த நிலைக்குத் தள்­ளி­வி­டக்­கூடும்'' என பதி­ல­ளித்தார்.


ஆரம்பப் போட்­டியும் பிர­ியா­விடைப் போட்­டியும் ஒரே மைதா­னத்தில் இடம்­பெறு­வதை நினை­வு­ப­டுத்­தி­ய­போது, ''சர்­வ­ தேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்­கையை ஆரம்­பித்த அதே மைதா­னத்தில் பிரி­யா­விடைபெறு­வது என்­பது அதிர்ஷ்டம். நான் மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டனும் மன­நிறை­வு­ டனும் சந்­தோ­ஷத்­து­டனும் விளை­யாடி வந்தேன். இந்­த­ளவு முன்­னேற்­றத்தை அடைவேன் என நான் எண்­ணி­ய­தில்லை. அர்ப்­ப­ணிப்­புத்­தன்­மை­யையும் விடா­மு­யற்­சி­யையும் நினைவில் நிறுத்­தி­ய­வாறு எனது திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வந்தேன்'' என் றார்.


இன்­றைய போட்­டி­யிலும் உலகக் கிண் ணப் போட்­டி­க­ளிலும் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக விளை­யா­டு­வீர்­களா? என வின­விய­போது, ''இங்­கி­லாந்­துக்கு எதி­ரான ஓரிரு போட்­டி­களில் என்னை ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக விளை­யா­டு­மாறு கிரிக்கெட் அணி முகா­மைத்­துவம் கேட்­டுக்­கொண்­டது. உலகக் கிண்ணப் போட்­டி­வரை இது தொட­ருமா என்று நான் கரு­த­வில்லை. அதற்கு முன்னர் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான தொடர் குறித்து நாம் சிந்­திக்­க­வேண்டும். மேலும் எமது குழாமில் இன்­னு­மொரு ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் இருக்­கின்றார். எனவே நாளைய (இன்று) போட்­டிக்கு முன்னர் தெரி­வா­ளர்­களும் அணி முகா­மைத்­து­வத்­தி­னரும் உரிய வீரர்­களைத் தெரிவு செய்வர் என மஹேல குறிப்­பிட்டார்.


குமார் சங்­கக்­கார தனது சொந்த மைதா­ னத்தில் சதம் குவித்­து­விட்டு விடை­பெற்­ற­து போல் நீங்­களும் சதம் குவித்து விடை­பெற முய­ற்­சிப்­பீர்­களா என வினவப்பட்டபோது, ''அப்படி ஒன்றும் இல்லை. என்னாலான அதிபட்ச பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது நோக்கம்'' என்றார்.


இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள இலங்கை 4–2 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment