அமெரிக்காவின் உடாஹ்(Utah) அருகே ஓக்டன்(Ogden) பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ்(Elizabeth Barrios).
இவரதனது 3 வயது குழந்தை எய்டனை(Aiden) காரில் பின் இருக்கையில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை 'டே கேர்' (Day care) மையத்தில் விட்டு வர சென்றுள்ளார்.
அப்போது இவரது காரை நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் டே கேர் மையத்திலிருந்து வெளியே வந்த எலிசபெத், கார் இல்லாததை பார்த்ததும் அதிர்ந்து போயுள்ளார்.
காரில் குழந்தை உள்ளதே என பதறிப்போன அவர் உடனடியாக பொலிசாருக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததுடன் காரில் தன் கைப்பேசி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின் எலிசபெத்தின் கைப்பேசி எண்ணை தொடர்புகொண்ட பொலிசார் குழந்தை எய்டனிடம் பேசியுள்ளார்.
அந்த நேரத்தில் காரை ஓட்டிவந்த நபர் வெளியே சென்றுள்ளதாக அவன் பொலிசாரிடம் கூறினான்.
உடனே சமயோகிதமாக செயல்பட்ட பொலிசார், எய்டனிடம் காரில் உள்ள ஹாரனை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் படி கூறியுள்ளனர்.
அதே வேளையில் அப்பகுதியில் உள்ள ரோந்து பொலிசாரிடமும், காவல் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளிடமும் இத்தகவலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட அவர்கள், தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ஹாரன் சத்தத்தை வைத்து எய்டனையும், காரையும் மீட்டுள்ளனர்.
குழந்தை காணாமல் போன 45 நிமிடங்களிலேயே காரையும், எய்டனையும் பத்திரமாக மீட்டு தந்ததால், எலிசபெத் மகிழ்ச்சி பொங்க தனது நன்றிகளை பொலிசாரிடம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment