ஊழல் குற்றச்சாட்டில் முன்னிலை வகிக்கும் விமல் வீரவன்ச

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வரிசையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச, ஜேவிபியில் இருந்த போது கடவத்தையில் உள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் இருந்து வருமானத்தை பெற்றுவந்தார்.
எனினும் 2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய பின்னர், அவர் பல்வேறு காரணங்கள் கண்டறியப்படாத வருமானங்களின் மூலம் இலட்சாதிபதியாகினர் என்று கடுவல மேயர் ஜி.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமல் வீரவன்ச, தமது மனைவியான சசி வீரவன்சவுக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்துள்ளார்
பொதுவில் அமைச்சர் ஒருவரின் பாரியார் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரித்துரியவர் அல்லர் என்ற நடைமுறையை மீறியே இந்த கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தவிர ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளை பிழையாக வழி நடத்தி இரண்டு தேசிய அடையாள அட்டைகளையும் சசி வீரவன்ச பெற்றுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையின் ஊடகம் ஒன்று விமல் வீரவன்சவை தொடர்புக்கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment