50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் எலும்புகூடு ஏலம்!
இங்கிலாந்தில் பழங்கால யானையின் எலும்புக்கூடு ஒன்று 2கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இங்கிலாந்தின் பில்லிங்சர்ட் பகுதியில் பழங்கால ஏல விற்பனை மையம் உள்ளது.
இந்த மையத்தில் 30 முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய யானையின் எலும்புக்கூடு ஏலத்தில் விடப்பட்டது. இந்த யானை எலும்புக்கூடு 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இந்த யானை 3.5 மீட்டர் உயரமும், 5.5 மீட்டர் நீளமும் நீண்ட தும்பிக்கையும் உடையதாகும். உலகம் தோன்றிய நாள் முதல் காணப்படும் இந்த யானை பனிக்கட்டி யானையாகும். 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய யானை இனங்கள் அழிந்து விட்டன. அதுபோல 30 சென்டிமீட்டர் நீளம் கொண்ட யானை பறவை முட்டையும் 42 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
0 comments:
Post a Comment