கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா , அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’ . ‘ஐ’ படத்திற்கு அடுத்து இந்த வருட துவக்கத்தில் அனைவரின் எதிர்ப்பார்ப்பிற்கும் உரிய படமாக மாறியுள்ள இப்படத்திற்கு சென்சார் தரப்பு யு/ஏ சான்று கொடுத்துள்ளது. எனினும் படக்குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் பெற முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சென்சார் வேலைகள் ஓரளவிற்கு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி என உறுதியாகியுள்ளது.மேலும் அதற்குறிய போஸ்டர்களும் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் கசிந்துள்ளது. ’என்னை அறிந்தால்’ படம் 2 மணி நேரம், 32 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாகியிருக்கிறதாம்.
ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய ‘ஐ’ மற்றும் ‘லிங்கா’ இரு படங்களும் கலவையான விமர்சஙகளையே பெற்றுள்ளன. அந்த வகையில் ‘என்னை அறிந்தால்’ படம் ரசிகர்கள் அனைவரின் எதிர்ப்பர்ப்பையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment