போலந்தின் அவுஷ்விட்சில் உள்ள ஹிட்லரின் நாஸி கொலை முகாமை, சோவியத் படைகள் விடுவித்ததன் 70வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வண்ணம் அந்தக் கொலை முகாமில் கொலை செய்யப்படாமல் உயிர் தப்பியவர்கள் அந்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் 1940லிருந்து 1945ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் யூதர்கள். முன்னாள் சிறைக்கைதிகள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் இந்த நினைவாஞ்சலி நிகழ்வுகளின் தொடக்கத்தில் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
போர்க்காலத்தில் நாஸி ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட நேச நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

0 comments:
Post a Comment