சட்ட ஒழுங்கின் நியாயத் தன்மையை எதற்காகவும் ஜனாதிபதி விட்டுக் கொடுக்கக் கூடாது: ஹிருனிகா

கருணையையும் சட்டம் ஒழுங்கின் நியாயதிக்கத்தன்மையையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கோரியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதே நல்லாட்சியாகும்.
எனது தந்தையின் கொலையாளிகளுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் வரையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தனை செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.
இந்த ஆண்டில் தந்தையின் கொலையாளிகளுக்கு தண்டனை விதித்து சட்டம் ஒழுங்கின் நியாயதிக்கத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என ஹிருனிகா கோரியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் 59ம் சிறார்த்த தின நிகழ்வுகள் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment