ஒரு வருடத்தில் அதிகப்படியான நேரத்தில் வெயிலை சந்திக்கும் நம் நாட்டில் மழைக்காலமும் குளிர் காலமும் சொர்க்கத்தை போல் தெரியும். வெயிலில் வெந்து போகும் நமக்கு எப்போதுதான் மழைக்காலமும் குளிர் காலமும் வரும் என்ற ஏக்கம் ஏற்படும்.
அதுவும் குளிர் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். மார்கழி மாத குளிரில் போர்த்திக் கொண்டு தூங்குவது என்றாலே அலாதி சுகம் தான். அந்த சுகத்திற்காகவே மார்கழி மாதம் பிறப்பதற்கு வழி மேல் விழி வைத்து காத்திருப்போர் பலர். சுகம் என்று ஒன்று இருந்தால் அதனுடன் சேர்ந்து சில கஷ்டங்களும் இருக்க தானே செய்யும். ஆம், குளிர் காலத்தோடு சேர்த்து சில பிரச்சினைகளும் சேர்ந்ேத வரும். அது தான் உதடு வெடிப்புகள், வறண்ட சருமம், பொடுகு போன்ற சில இம்சைகள்.
சிலர் இந்தப் பிரச்சினைகளால் வருடம் முழுவதும் அவதிப்பட்டு வந்தாலும், குளிர் காலத்தில் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. அதுவும் குளிர் காலத்தில் உங்கள் தலைச்சருமம் வறண்டு போவதால் பொடுகு அதிகமாக தென்படும். இந்தப் பிரச்சினைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? வருத்தம் வேண்டாம். இதோ பொடுகு இல்லாத தலை முடியை சீக்கிரமாகப் பெற சில எளிய வீட்டு சிகிச்சைகளை உங்களுக்காக நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
வேம்பு : வேம்பை கொண்டு வீட்டில் தயார் செய்யப்படும் பேக்கை வைத்து பொடுகு பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். தேவையானவை: ¼ கப் வேப்பிலைச் சாறு, தேங்காய் பால் மற்றும் பீட்ரூட் ஜூஸ் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை: அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, தலைச்சருமத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மூலிகை ஷாம்போ மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவி விடவும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
வெந்தயம்: வெந்தயமும் கூட பொடுகை குறைக்க உதவும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் இந்த பொடுகுகளை ஓடச் செய்யும். தேவையானவை: 2 டீஸ்பூன் வெந்தயம் 1 கப் தண்ணீர் 1 கப் ஆப்பிள் சீடர், வினீகர்
செய்முறை: முந்தைய நாள் இரவு வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலை அதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஆப்பிள் சீடர் வினீகர் சேர்த்து உங்கள் தலைச்சருமத்தில் தடவவும். அதை அப்படியே 30 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் மிதமான ஷாம்போவை கொண்டு அலசவும். அரிப்பு மற்றும் வறண்ட தலைச்சருமத்தில் இருந்தும் இது நிவாரணத்தை அளிக்கும்.
எலுமிச்சை : இந்த சிட்ரஸ் பழத்தில் விற்றமின் சி வழமையாக உள்ளது. மேலும் அமிலத்தன்மையுடன் விளங்குகிறது. இதனால் பொடுகை அண்ட விடாது. அதனை தலையில் பிழிந்திடலாம் அல்லது தலையில் வைத்து நன்றாக தேய்க்கலாம். தேவையானவை: 4 எலுமிச்சை பழ துண்டுகள் அல்லது ஜூஸ்
செய்முறை: எலுமிச்சை துண்டுகளை உங்கள் தலைச் சருமத்தில் தடவி அதை அப்படியே 10-–15 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் சாதாரண தண்ணீரில் அலசுங்கள். நல்ல பலனை பெற இதனை வாரம் ஒரு முறை செய்யுங்கள்.
செய்முறை: எலுமிச்சை துண்டுகளை உங்கள் தலைச் சருமத்தில் தடவி அதை அப்படியே 10-–15 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் சாதாரண தண்ணீரில் அலசுங்கள். நல்ல பலனை பெற இதனை வாரம் ஒரு முறை செய்யுங்கள்.
சோத்துக் கற்றாழை: ஜெல் பொடுகை கட்டுப்படுத்துவதில் கில்லாடியாக செயல்படுகிறது சோத்துக் கற்றாழை ஜெல். அதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் போக, சருமத்தை இதமாக வைக்கவும் அரிப்பை நிறுத்தவும் கூட இது உதவுகிறது. தேவையானவை: 5 டீஸ்பூன் சோத்துக் கற்றாழை ஜெல்
செய்முறை: சோத்துக் கற்றாழை செடி யில் இருந்து ஜெல்லை நேரடியாக எடுக் கலாம் அல்லது கடைகளில் விற்கும் ஜெல்லை பயன்படுத்தலாம். அதனை உங்கள் தலைச்சருமத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் தலையில் எண்ணெய் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண தண்ணீர் அல்லது மிதமான ஷாம்போவை கொண்டு கழுவுங்கள். வறண்ட முடியை கொண்டவர்கள் ஒரு நாள் கழித்து கூட முடியை கழுவிக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment