தாய் மொழியில் அனுஷ்கா...?

தமி­ழிலும், தெலுங்­கிலும் அனுஷ்­காவின் அழ­குக்­கென்று தனி ரசிகர் கூட்டம் உள்­ளது. 30 வயதைத் தாண்­டி­னாலும் அனுஷ்­காவின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகி­றது என அவர்கள் கூறி வரு­கி­றார்கள்.
ஆனால், சமீ­பத்தில் வெளி­வந்த 'லிங்கா' படத்தில் அனுஷ்­காவின் தோற்­றத்தைப் பார்த்து கிண்­ட­ல­டித்­த­வர்கள் கூட சமீ­பத்தில் வெளி­யான 'ருத்­ர­மா­தேவி' படத்தின் ஒரே ஒரு புகைப்­ப­டத்தைப் பார்த்து வாய­டைத்துப் போய்­விட்­டார்கள். தமிழில் அவர் அடுத்து நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் புகைப்­ப­டங்­களும் அனுஷ்­காவின் அழகை அப்­ப­டியே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.
தமிழ், தெலுங்கில் முன்­னணி நடி­கை­யாக இருக்கும் அனுஷ்கா கர்­நா­டக மாநிலம் மங்­க­ளூரைச் சேர்ந்­தவர். தமிழில் 11 படங்­க­ளிலும், தெலுங்கில் 27 படங்­க­ளிலும் நடித்­துள்ள அனுஷ்கா இது­வரை எந்த ஒரு கன்­ன­டப்­ப­டத்­திலும் நடித்­த­தில்லை. யோகா மாஸ்­ட­ராக இருந்த அனுஷ்­காவை 2005ஆம் ஆண்டு வெளி­வந்த 'சூப்பர்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறி­மு­க­மாக நாகார்­ஜு­னாதான் கார­ண­மாக இருந்தார்.
2006ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்­கிய 'ரெண்டு' படம் மூலம் தமிழில் அறி­மு­க­மா­னாலும், 2009 இல் வெளி­வந்த 'வேட்­டைக்­காரன்' படம் மூலம்தான் அனுஷ்கா தமிழில் பிர­பல்­ய­மானார். தற்­போது 'என்னை அறிந்தால்', 'பாகு­பலி','ருத்­ர­மா­தேவி' ஆகிய படங்­களின் வெளி­யீட்டை எதிர்­நோக்­கி­யி­ருக்கும் அனுஷ்­கா­விற்கு தற்­போது கன்­ன­டத்தில் தர்ஷன் ஜோடி­யாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்­துள்­ளதாம். அதற்கு அனுஷ்கா சம்­ம­திப்­பாரா என்­பது இனி­மேல்தான் தெரி­ய­வரும். திரை­யு­லகில் அறி­மு­க­மாகி பத்து வரு­டங்கள் கழித்தாவது தாய்மொழிப் படத்தில் நடிக்க அனுஷ்கா சம்மதிப்பாரா என கன்னட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment