இந்தியா-பாக். மோதல் கவலை தருகிறது: கெர்ரி


பாகிஸ்தானில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கெர்ரி

பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தகராறு நிலவும் காஷ்மீர் பகுதியில் அண்மையில் நடந்த மோதல்கள் தனக்கு ஆழ்ந்த கவலையைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளும் ராஜீய வழியில் தீர்வு தேட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தாலிபான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி பேசுவதற்காக முன்னறிவிப்பு செய்யாத பயணம் ஒன்றை அந்நாட்டுக்கு கெர்ரி மேற்கொண்டுள்ளார்.

நாட்டின் வட மேற்கே பாகிஸ்தான் இராணுவம் எடுத்துவரும் இராணுவ நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.

கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்திருந்த இந்த நடவடிக்கையின் விளைவாக கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜான் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment