தயாராகி விடுவாரா மலிங்கா? கருத்து வெளியிட்ட ஜெயவர்த்தனே



இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்காவின் உலகக்கிண்ண செயல்பாடு குறித்து மஹேல ஜெயவர்த்தனே கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மலிங்கா, தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறார். இவர் உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்பாரா என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தவாறு உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜெயவர்த்தனே கூறுகையில், மலிங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னரே பந்து வீச ஆரம்பித்து விட்டார்.

இதுவரையில் அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எனினும் உலகக்கிண்ணத் தொடரில் களமிறங்குவதற்கு முன்னர் விளையாட முடியுமா என நூறு சதவீதம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் உலகக்கிண்ணத் தொடரில் களமிறங்க தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment