இலங்கை அணியால் மகிழ்ச்சி அடையவில்லை: சனத் ஜெயசூரியா கவலை



உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணியை தயார் செய்வதில் மகிழ்ச்சி இல்லை என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா கவலை தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு சில தினங்களே உள்ளன. இதற்கு முன்னதாக இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் ஒரு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி குறித்து சனத் ஜெயசூரியா கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நியூசிலாந்தில் இலங்கை அணியின் செயல்பாடால் நான் 100 சதவிதம் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். சில வாரங்களில் அணியில் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும்.

ஒரே ஒரு நல்ல விடயம் என்னவென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது விளையாடிக் கொண்டிருப்பது. அந்த அணியை நியூசிலாந்தில் எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.

அதே போல உலகக்கிண்ணத் தொடரில் தொடக்க போட்டியையும் எளிதாக கையாள முடியும் என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment