ரூபவாஹினிக்குள் அதிரடியாக புகுந்தார் தேர்தல் ஆணையாளர்!








இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு சற்று முன்னர் அதிரடி விஜயம் செய்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ரூபவாஹினியில் இன்று காலை ஒளிபரப்பான செய்தியை வன்மையாக கண்டித்து எச்சரித்ததுடன் மறுப்பறிக்கையையும் ஒளிபரப்ப செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்- நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து ஜனாதிபதி மகிந்தவை ஆதரிப்பதாக ரூபவாஹினியில் இன்று காலை செய்தி ஒன்று ஒளிபரப்பானது.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ எம்.பி , தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே அங்கு விரைந்த ஆணையாளர், அந்த செய்திக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை கொடுத்து மறுப்புச் செய்தியை ஒளிபரப்புமாறு பணித்தார்.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment