நீ வருவாயென...

 
ஒட்டடை படிந்த ஓலைக்
குடிசையாய்
என் காதல் தேசம்...
என்றாலும்
கவிச் சிலந்திக்கு...
அது அரண்மனை ஆச்சே!
காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது....
நிலா நீ
எங்கிருக்கிறாய்!
எந்தன்
காதல் தேசம்
உனக்காகவே...
நீயில்லாமல்,
நீரில்லாமல் வறட்சி கண்ட
பாலை நிலமாய்
சில முற்செடிகளும்
சில புதர்களுமாய்
கருகிப் போகிறது...
                                    M.H.M.Aasath
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment