துருக்கி வரலாற்றிலேயே பிரமாண்டமான பள்ளிவாசல்




துருக்கி தலைநகர் இஸ்தான்பூலில் காண்லிகா பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. துருக்கியின் ஐரோப்பிய பகுதியையும் ஆசியப் பகுதியையும் பிரிக்கின்ற 31 கி.மீ. நீளமுள்ள பாஸ்பொரஸ் நீரிணையில் (ஜலசந்தி) ஆசியா கரையில் இப்பள்ளிவாசல் அமையவிருக்கிறது. துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் உருதுகான் பள்ளிவாசல் கட்டுவதற்கான திட்டத்தைத் தீர்மானித்துள்ளார்.



தரைப் பகுதியில் பெரிய வசதிகளுடன் கட்டப்படவிருக்கும் இப்பள்ளிவாசலின் கட்டுமான பணிக்கு 150 மில்லியன் துருக்கி லீரா (56 மில்லியன் யூரோ) செலவு பிடிக்கும். துருக்கி குடியரசின் வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமான பள்ளிவாசலாக அமையவிருக்கும் இதன் கட்டுமானப் பணிகளை பஹார் மீஸ்ராக், ஹாப்ரீ ஜோல் ஆகிய இருபெரும் பொறியாளர்கள் ஏற்கின்றனர். 3 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பள்ளிவாசல் எழுப்பப்படுகிறது.



இப்பள்ளிவாசலில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியான தளம், சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கான பெரிய மாடம் (Balcony), அருங்காட்சியகம், நூலகம், சுமார் 3500 கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி ஆகியன இருக்கும்.



இஸ்தான்பூல் நகரிலேயே உயரமான இடம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பெரும் பகுதிகளில் இருந்து பார்த்தால் தெரிகின்ற அளவுக்கு இது உயரமாக அமைகிறது. குறிப்பாக, பாங்கு மேடை துருக்கியிலேயே மிகவும் உயரமாக இருக்கப்போகிறது.
(அலூகா)
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment