எலியொட், ரொன்சியின் இணைப்பாட்டத்தால் ஐந்தாவது போட்டியில் இலங்கை தோல்வி
நிய+ஸிலாந்துடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில்;
இலங்கை அணி 108 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்த வெற்றியுடன் நிய+ஸிலாந்து அணி ஏழு போட்டி களைக் கொண்ட தொடரில் 3 -1 என முன்னிலை பெற்றது.
டுன்டினில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நிய+ஸிலாந்து அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டையும் பறிகொடுத் தது.
மார்டின் கப்டில், குலசேரவின் பந்துக்கு டக் அவுட் ஆனார். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிய+ ஸிலாந்து அணி 20 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் ஆறாவது விக்கெட்டுக்காக இணைந்த கிரா ன்ட் எலியொட் மற்றும் லுக் ரொன்சி ஆகியோர் ஆட்ட த்தை திசை திருப்பினர். இருவரும் கடைசி பந்துவரை களத்தில் இருந்து 267 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர்.
ஏழாவது விக்கெட்டுக்காக கள மிறங்கிய ரொன்சி; 99 பந்துகளில் 14 பௌண்டரி கள் மற்றும் 9 சிக்ஸர்களு டன் ஆட்டமிழக்காது 170 ஓட்டங்களை பெற்றார். மறு முனையில் எலியொட் 96 பந்துகளில் 7 பௌண்டரி கள் மற்றும் 8 சிக்ஸர்களு டன் 104 ஓட்டங்களை குவி த்தார்.
இறுதியில் நிய+ஸிலாந்து 50 ஓவலர்களில் 5 விக் கெட்டுகளை இழந்த 360 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை சார்பில் 7 வீரர் கள் பந்துவீசியதோடு குல சேகர மற்றும் திரிமான்ன தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலெடுத் தாட களமிறங்கிய இல ங்கை அணிக்கு ஆரம்ப வீரர் டில்'hன் சதம் பெற் றார். 106 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 17 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 116 ஓட்டங் களை குவித்தார்.
எனினும் வேறு எந்த வீரரரும் அரைச்சதத் தைக் கூட எட்ட வில்லை. இறுதியில் இல ங்கை அணி 43.4 ஓவர்களில் 252 ஓட்டங்க ளுக்கு சுருண்டது.
நிய+ஸிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய டிரென்ட் போல்ட் 4 விக்கெட் டுகளை பதம்பார்த்தார். அபார இணைப் பாட்டம் பெற்ற எலியொட் மற்றும் ரொன்சி ஆகியோர் ஆட்ட நாயகன் விருதை வென்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறா வது ஒருநாள் போட்டி நாளை டுன்டனில் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர் தோல்வியை தவிர்க்க அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றிபெறுவது கட்டாயமாகும்.
0 comments:
Post a Comment