நடிகர் விக்ரம் தனது "ஐ" திரைப்படத்தின் சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த 'ஐ' திரைப்படம் தற்போது வெற்றித்திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்காக பெற்ற தனது சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக விக்ரம் கொடுத்துள்ளார்.
இதயநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நடிகர் விக்ரம் ஏற்கனவே இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார். விக்ரமின் உதவியினால் இதயநோய் குணமான சிறுமி ஒருவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தனது நன்றியை நடிகர் விக்ரமிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment