பாகிஸ்தானில் பொலிஸ் தலை­மை­ய­கங்­க­ளுக்கு அருகில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி

பாகிஸ்­தானின் லாகூர் நகரில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்­தது 8 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.
குண்டு வெடிப்­பா­னது அந்­ந­க­ரி­லுள்ள பொலிஸ் தலை­மை­ய­கங்­க­ளுக்கு அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.
பாகிஸ்­தானின் இரண்­டா­வது மிகப் ­பெ­ரிய நகரும் பிர­தமர் நவாஸ் ஷெரீப்பின் அதி­கார தள­மா­கவும் லாகூர் நகர் விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
வட­மேற்கு நக­ரான பெஷா­வரில் பள்­ளி­வா­ச­லொன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூடு மற்றும் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களில் 22 பேர் பலி­யான சம்­ப­வத்­துக்கு சில நாட்­களில் இந்தத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தா­னிய தலிபான் தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் டொக்­டர் உஸ்மான் என்ற போரா­ளிக்கு நிறை­வேற்­றப்­பட்ட தூக்குத் தண்­ட­னைக்கு பழி­தீர்க்கும் முக­மா­கவே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அந்தக் ­குழு தெரி­வித்­துள்­ளது.
பெஷா­வ­ரி­லுள்ள பாட­சா­லையில் 150 க்கு மேற்­பட்­ட­வர்கள் தலியான் துப்­பாக்கி தாரி­களால் படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பாகிஸ்தானில் மரணதண்டனைகளை நிறைவேற்றுவதில் நிலவிய ஸ்தம்பித நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment