விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை வெற்றி : தினேஷ்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த விசா­ரணை அறிக்­கையை பிற்­போ­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளமை நாட்­டுக்கு கிடைத்­துள்ள வெற்றி என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

ஆனால் ஆறு மாதங்­களின் பின்னர் எவ்­வா­றான அறிக்­கையை மனித உரிமைப் பேரவை வெளி­யிடும் என்­பது குறித்து அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த இலங்கை மனித உரிமை மீறல் குறித்த விசா­ரணை அறிக்கை பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த விசா­ரணை அறிக்­கையை பிற்­போ­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இது உண்­மையில் நாட்­டுக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம்.
ஆனால் ஒரு விடயம் குறித்து நாடு அவ­தா­ன­மாக இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது ஆறு மாதங்­களின் பின்னர் இந்த அறிக்கை வெளி­வ­ரலாம். அப்­போது எவ்­வா­றான விட­யங்­களை உள்­ள­டக்­கிய அறிக்கை வரும் என்று பார்க்­க­வேண்டும்.
புதிய அர­சாங்கம் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தாக கூறி­யுள்­ளது. எமது முன்­னைய அர­சாங்­கமும் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுத்­தது. காணா மல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வ தற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது என்றார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment