இலங்கை அணியுடனான பயிற்சி போட்டி: தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத் தில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடை யில் நேற்று திங்கட்கிழமை கிறிஸ்ட்சர்ஜpல் உலகக் கிண்ண பயிற்சி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னா பிரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இல ங்கை அணி 44.4 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் டில்சான் 100 ஓட்டங்களையும் மெத்தியு+ஸ் 58 ஓட்டங் களையும் பெற்றுக் கொள்ள கருணாரத்ன 46, சங்ககார 31 மற்றும் மென்டிஸ் 15 ஓட்டங்க ளையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணியின் சார் பில் கைல் அபொட் 3 விக்கெட்களையும் வேய்ன் பார்னெல் 2 விக்கெட்களையும் பிலான் டர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா ஒரு விக் கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னா பிரிக்க அணி 24.3 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்கா வெற்றி அணியாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் சார்பில் டி கொக் 66 ஓட்டங்களையும் அம்லா 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள பிளெஸிஸ் 19, டுமினி 17, ரூஸோ 16 மற்றும் பிலாண்டர் 13 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ஹேரத் 3 விக்கெட்களையும் மலிங்க மற்றும் குலசேகர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment