கிழக்கு மாகாண சபை:தமிழ்கூட்டமைப்பு தொடர்ந்தும் மு.காவுடன் பேச்சு

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகிப்பது தொடர்பான விடயம் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையான வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

இவ்விவகாரமானது முரண்பாடுகளுக்கு உரியதல்லவென்றும், சுமுகமான திசையை நோக்கியே ஆராயப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரொருவர் நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையில் இன்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதனால் வரவு செலவுத் திட்ட விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை முன்னெடுப்பது என்பது குறித்து தமிழத் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் நேற்று ஆராய்ந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) தமிழத் தேசியக் கூட்டமைப்பினால் முடிவொன்று எட்டப்பட்டு விடுமென கூட்டமைப்பு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

இது இவ்விதமிருக்க இன்றைய புதிய அரசாங்கத்தில் அரசாங்க சார்பு ஊடகங்கள் கடைப்பிடிக்கும் நடுநிலைமை சார்ந்த போக்கு திருப்தியளிப்பதாக கூட்டமைப்பு முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment