''மூன்று காதல்­களைத் தாண்டி வந்­தி­ருக்­கிறேன்''

“பிறந்து 30 வரு­ஷ­மா­யி­டுச்சு. சினி­மாவில் நுழைஞ்­சப்ப நிறைய பண்­ண­னும்னு ஆசை இருந்­தது. இப்போ எதுக்­காகப் பொறந்­தோம்னு ஒரு ஆன்­மிகத் தேடல்தான் மன­சுக்­குள்ள ஓடிக்­கிட்டு இருக்கு. மன­சுக்­குள்ள ஒரு தெளிவு இருக்கு. சினி­மாவில் எல்­லாத்­தையும் பார்த்­தி­ருக்கேன். கடைசி ரெண்டு வரு­ஷத்தில் எது­வுமே இல்­லாமல் இருந்த இன்­னொரு பக்­கத்­தையும் பார்த்­தி­ருக்கேன். அத­னால, இந்த வருடப் பிறந்த நாளை ரொம்ப நிம்­ம­தியா கொண்­டா­டினேன்!” என்று கூறும் சிம்­புவின் வார்த்­தைகள் ஒவ்­வென்­றிலும் வழி­கி­றது வாழ்க்கை தத்­து­வங்கள்.
Image result for nayantharaஉங்கள் பிறந்­தநாள் விருந்தில் நயன்­தாரா கலந்­து­கொண்­டது பர­ப­ரப்­பாகி இருக்­கி­றதே?
ஏன் அவங்க வரக் கூடாது? என்­னோட நடிக்க தின­சரி படப்­பி­டிப்­புக்கு வர்­ற­வங்க, என்­னோட பார்ட்­டிக்கு வந்­ததில் என்ன பர­ப­ரப்பு? நயன் மட்­டு­மில்ல, நிறைய பேர் அந்த பார்ட்­டிக்கு வந்­தாங்க. தனுஷ், நயன்­தா­ரான்னு எல்­லா­ரோ­டவும் நெருக்­க­மாத்தான் பழ­குறேன்.
ஹன்­சிகா, நயன்­தாரா இரு­வ­ரு­டனும் காதல் பிரி­விற்கு பிறகு நடித்­தி­ருக்­கி­றீர்கள். காத­லிக்­கும்­போது இருந்த மன­நிலை என்ன? நடிக்கும் போது இருந்த மன­நிலை என்ன?
Image result for hansika motwani in white dressபாக­வதர் காலத்தில் இருந்­தது போலவே இப்­பவும் நாம இருக்க முடி­யாது. வாழ்க்­கைங்­கி­றது ஒரு சில­ரோட மட்டும் முடி­யுற பொழப்பு இல்ல. இப்­படி நடந்­தி­டுச்­சேன்னு நினைச்­சுக்­கிட்டே இருந்தால் வாழ்க்கை நக­ராது. இந்தப் புரிதல் என் மனசில் தெளிவா இருக்­கி­ற­தா­லதான் நயன், ஹன்­சி­கா­வோட எதையும் பார்க்­காமல் நடிக்க முடி­யுது. நிகழ்­காலம், வருங்­கா­லம்னு நினைக்­கி­றது முட்­டாள்­தனம். இப்போ நகரும் மணித்­து­ளிகள் மட்­டுமே உண்மை.
நீங்கள் காத­லிக்­கும்­போது பண்­ணிய வேடிக்­கை­யான விஷயம் என்ன?
நான் காதல் பண்­றதே க்ரேஸி­யான விஷ­யம்தான். என்னை மாதிரி ஒருத்தன் காத­லிக்­கவே முடி­யாது. மூன்று காதலைத் தாண்டி வந்­தி­ருக்­கிறேன் என்­பதை என்னால் நம்ப முடி­ய­வில்லை.
2015 இல் திரு­மணத் திட்டம் உள்­ளதா?
எதுக்கு நான் கல்­யாணம் பண்­ணிக்­கணும்? நான் கல்­யா­ணத்­திற்கு எதி­ரா­னவன் இல்லை. கல்­யா­ணம்­கி­றது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்­ணிக்­கொள்­வது. கல்­யாணம் நடக்­கிற அள­வுக்கு இப்போ விவா­க­ரத்தும் நடக்கத் தொடங்­கி­டுச்சு. கல்­யாணம் பண்ணி விவா­க­ரத்­தாகி, அப்­புறம் புரிதல் உண்­டாகி, அதுக்­கப்­பு­றம்தான் கல்­யாணம் சரியா அமை­யுது. ஒவ்­வொரு பத்து வரு­டத்­துக்கும் நம்­மு­டைய கலா­சா­ரமும், சமூ­கமும் மாறிக்­கிட்­டேதான் இருக்கு. அதுக்கு ஏற்­பத்தான் நாம வாழணும். அதை விட்­டுட்டு, பின்­னோக்­கிப்போய் நான் இப்­ப­டித்தான் இருப்­பேன்னு சொல்ல முடி­யாது. சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்­திக்­கி­ற­வன்தான் இந்த சிம்பு. ஏதோ ஒரு பெண் பார்த்து, பேசி முடிச்சு, தாலி கட்டி வாழ்ந்­துட முடி­யாது. 'இவ­கிட்ட சாகுற வரைக்கும் தோற்­கலாம்'கிற அள­வுக்கு மனசைப் பொளக்­குற பொண்ணு கிடைக்­கட்டும்.
உங்கள் படங்கள் வெளி­யாக மூன்று வருட இடை­வெளி விழுந்­து­டுச்சே?
இனிமேல் இந்தப் பிரச்­சினை இருக்­கா­துன்னு நினைக்­கிறேன். அதனாலதான் ‘இது நம்ம ஆளு' படத்தை நானே தயாரிக்கிறேன். அதற்குப் பிறகு வரக்கூடிய படங்கள் எல்லாமே தேர்ந்தெடுத்து சரியாத்தான் பண்ணுவேன். கெளதம் மேனன் படத்தை முடிச்சிட்டு, செல்வராகவன் இயக்கும் படத்துக்கு 'டேட்' கொடுத்திருக்கேன்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment