பாராளுமன்றத்தின் பெப்ரவரி மாதத்திற்கான இரண்டாவது கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் கடற்றொழில் நீர் வாழ் உயிரின வளங்கள் திருத்தச் சட்ட மூலம் சபை ஆரம்பிக்கப்படும்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு அது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெற்று மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை வியாழக்கிழமை 19ஆம் திகதி குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்ட மூலம் தொடர்பான விவாதம் நடத்தப்படுவதோடு அதன் பின்னர் வாக்கெடுப்பும் இடம்பெறும்.
20ஆம் திகதி வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு அது
தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெற வுள்ளது.
தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெற வுள்ளது.
0 comments:
Post a Comment