இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பிற்போட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வையர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையை பிற்போட்டிருந்தாலும் அதனை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கான அழுத்தத்தை பிரிட்டன் பிரயோகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மற்றும் இலங்கை குறித்த விசாரணையை முன்னெடுத்த ஐ.நா. விசாரணைக் குழுவினர் ஆகியோர் செய்த பரிந்துரையின் பிரகாரம் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை மனித உரிமை பேரவை பிற்போட்டுள்ளது.
இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்ற நோக்கத்திற்காக தான் இந்த பரிந்துரையை செய்வதாகவும் ஒரு முறை மட்டுமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் {ஹனே் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment