புதிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்று மிகக் குறுகிய காலத்தில் அவர் அப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும் தான் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
நேற்று உத்தியோகபூர்வமாக பதவி விலகிய முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, தனது இராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
ஏகாதிபத்திய அரசாங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு தொடர்ந்து ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியில் இருந்து விலகினா லும் தொடர்ந்து இந்த அரசாங்கத்துடன் இருந்து செயற்பட உள்ளதாகவும் கூறினார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும் எதிர்காலத்திலும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பைசர் முஸ்தபா கடந்த அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராக பதவி வகித்தார். ஜனாதிபதி சட்டத்தரணியான இவர் ஏகாதிபத்திய அரசாங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வெற்றிக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை செய்தார்.
இந்நிலையில் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பைசர் முஸ்தபா நேற்று அப்பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment