முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்காவை பார்வையிட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் அங்கிருந்து மஹிந்த ராஜபக்ஷ சென்றுவிட்டார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இரகசிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணமொன்றை காண்பித்திருந்தார்.
இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கையெழுத்து இடப்பட்டிருந்த ஆவணமொன்றையும் ஊடகவியலளர்களிடமும் காண்பித்தார்.
இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் கையெழுத்து போலியானது என்ற சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்யப்பட்டார்.
தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வரும் திஸ்ஸ அத்தநாயக்க எம்பியை முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நலன் விசாரித்துள்ளார்.
0 comments:
Post a Comment