அந்த 6 பேரும் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் போனதையடுத்து அவர்கள் துப்பாக்கியால் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு இறந்ததாக நீதித்துறை அதிகாரிகள் கூறினர். தைவானில் கயோசியுங் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட பலவித குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பேர் புதன்கிழமையன்று தங்களுக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி மருந்து வாங்கச் சென்றிருக்கின்றனர். பின்னர் சிறைச்சாலை ஊழியர்கள் இருவரை பிணைப்பிடித்த அந்த 6 பேரும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் கூறின.
0 comments:
Post a Comment