அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 முஸ்லிம் மாணவர்களை, சேப்பல் ஹில்ஸ் பகுதியிலுள்ள அவர்களது குடியிருப்பு பகுதியில் ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலிசார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மாணவர்களில் இருவர், கணவன்- மனைவி என்பது தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த மாணவர்கள் சிரியா நாட்டைச் சேர்ந்த தேஹா பராகத் (23) அவரது மனைவி யுசூர் முகம்மது (21), அவரது தங்கை ரசன் அபு சல்ஹா (19) என்று அமெரிக்கப் போலிசார் கூறியுள்ளனர். ஸ்டீபன் தானாக முன்வந்து போலிசாரிடம் சரண டைந்துள்ளார். இவர் தன்னை ஒரு நாத்திகர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.
சுட்டுக்கொல்லப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் மூவருக்காக வட கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் மற்ற மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
0 comments:
Post a Comment