பகிடிவதையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவி எஸ்.எஸ். அமாலி தனது உயிரை தானே மாய்த்து உயிரிழந்திருக்கிறாள். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் இந்த மாணவி விடுமுறையில் வீட்டில் நின்றபோது தான் இந்தச் சம்பவம் நடந்தி ருக்கிறது. பன்னிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள மாவுல்கொட என்ற இடத்தில் இவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.
தனது தாயாரோடு தனிமையில் வசித்து வந்தவரான இந்த யுவதி, தாயார் தொழிலுக்குச் சென்றிருந்த வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் என்பதுதான் பொலிஸ் அறிக்கையாக இருக்கிறது.
சடலத்துக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கடிதமொன்று நெஞ்சை உருக்குவதாக இருந்தது. “என்னுடைய சடலத்தை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் எவருக்கும் காட்டக்கூடாது. அங்கிருந்து யாரும் வந்து பார்க் கவும் அனுமதிக்க வேண்டாம். எனக்கு சொந்தமான சொத்துக்களை மஹரகம. புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு சேர்த்துவிடுங்கள். அதேநேரம். என்னுடைய மரணச் செலவுக்கு என்னுடைய வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைச் செலவிடுங்கள்.”
கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறுதான் எழுதப்பட்டிருந்தது.
உண்மையில் இவர் ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்தப் பல் கலைக்கழகத்தில் தனது கற்கைநெறியைத் தொடர்வதற்காக இணைந்து கொண்டுள்ளார். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதிதான் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தன்னைப் பதிவு செய்துள்ளார். கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தில் க. பொ. த. (உ/த) கற்ற இவர், சமூக விஞ்ஞானத்துறையில் கற்கை நெறியைத் தொடர்வதற்காகவே மிகவும் ஆர்வத்தோடு சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் இணைந்து கொண்டார்.
இன்றைய கல்விச் சூழ்நிலையில் தனது பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து சமூகத்தில் உயர் அந்தஸ்துப் பெறவேண்டுமென்பதே அனைத்துப் பெற் றோர்களின் கனவாக இருக்கிறது. எத்தனை பெறுமதியான சொத்துக்களை இழந்தாவது கல்வியை புகட்ட வேண்டுமென்ற ஆர்வமிகுதியும் நம் சமூகத்தில் இப்போது வேரூன்றி இருக்கிறது. இப்படியான சமூகத்தில் கல்வியில் தன்னை வளமாக்க உறுதி பூண்ட இந்த யுவதி, தனது வாழ்வை இடைநடுவில் மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு பல் கலைக்கழகங்களின் கலாசாரம் சீரழிந்து போய்விட்டதென்பது பெரும் கவலையளிக்கிறது.
இந்த யுவதியின் குடும்பம் மிகவும் பரிதாபகரமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. இவர் சிறு வயதாக இருக்கும் போதே தனது தந்தை குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். தாயாரினதும் பாட்டியினதும் அவரணைப்பில் வளர்ந்த ஒரேயொரு செல்லக் குழந்தைதான் இவர். தந்தை விவாகரத்து பெற்றுவிட்டதால் தாய் தொழில் செய்தே இந்த யுவதியை படிப்பித்து வந்துள்ளார்.
தந்தையில்லாமலே தனது மகளை பல்கலைக்கழகம் அனுப்பிவிட்டேன் என்ற பெருமிதத்துடன் இருந்த தாய்க்கு கடந்த திங்கட்கிழமை மகள் தூக்கில் தொங்குகிறாள் என்ற செய்தி பேரிடியாகவே இருந்தது. வழமைபோன்று தொழிலுக்குச் சென் றிருந்த தாய், அங்கிருந்து பதறியடித்து வந்தபோது மகளின் கட்டை யையே சடலத்தையே கண்டாள்.
உண்மையில் இந்த மாணவியின் உயிரிழப்புக்கு தனிமையான சூழலும் காரணமாக அமைந்திருக்கிறது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்த போது இந்த மாணவி மீது கடும் பகிடிவதை நடத்தப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் மாறி மாறி இந்த மாணவியை பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலினால் இந்த மாணவி பாதிக்கப் பட்டிருந்ததாக அவருடைய தாயாரே மனம் நொந்து கொள்கிறார். உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட தாய் படிப்பில் வெறுப்படைந்த நிலையில் தனது கற்கை நெறியை இடைநடுவில் கைவிட்ட அவர், களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உளவள சிகிச்சைக்கு உட்படுத் தப்பட்டார்.
இந்த நிலையிலும் பல்வேறு தடவைகள் இவர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். என்றாலும், உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கொடுக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் பல்கலைக்கழகம் இந்த மாணவியை மீண்டும் கற்கை நெறிக்கு இணைத்துக் கொண்டதாகத் தெரிய வருகிறது.
பல்கலைக்கழக மாணவர்களைக் கண்டாலே பிய்த்துக் குதறும் அளவுக்கு உளப் பாதிப்பு இவருக்கு ஏற்பட்டுள்ளது. உயிர் துறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் இந்த மாணவி எழுதியுள்ள கடிதம் இதனை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த மாணவியின் உயிரிழப்புக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது பகிடிவதை என்ற சித்திரவதை, மற்றது தற்கொலை செய்து கொள்வதற்கு பல தடவைகள் முயன்ற ஒருவரை தனிமையில் விட்டுச் சென்றமை. இவை இரண்டுமே இந்த உயிரிழப்புக்கு காரணங்கள் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டி இருக்கிறது.
தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள நினைப்பவர்கள் ஏதோ ஒருவகையில் தங்களை அறியாத அறிகுறிகளை வெளிப்படுத்துவார்களென உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களை நன்கு அவதானித்து உளவள சிகிச்சை வழங்குவதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த மருந்தும் சரிப் பட்டு வராது என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.
இலங்கையில் ‘சுமித்ரயோ’ போன்ற அமைப்புக்கள் உளவள நலச் சிகிச்சை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறதென்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எது எப்படியோ பல்கலைக்கழக மாணவி ஒருத்திக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கவே கூடாது. பல்கலைக்கழகம் என்பதை ஒரு பகிடிவதைக் கூடமாக நினைக்கும் அளவுக்குத்தான் நிலைமை மோசமடைந்திருக்கிறது. தனது பிள்ளைகள் உயர்கல்வி கற்க வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் இருக்கிறார்கள் என்பது வரவேற்கக் கூடியது. அதே பெற்றோர்களே இன்று தலையில் கையை வைத்துக் கொண்டு பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்புகின்றனர்.
உயர் கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தையும் ஏற்றத்தாழ்வுகளையும் போக்குவதற்காகவே அந்தக் காலங்களில் ட்ராக்கிங் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுவாரஷ்யமாக அதேநேரம் எவரையும் பாதிக்காத வகையில் குறிப்பிட்ட சில தினங்களுக்குள் அதனை நிறுத்தி இறுதியில் சோசியல் (ஷிoணீial) வைத்து சகல மாணவர் களுமே ஐக்கியமாகி விடுவார்கள். இந்த நிலை தலைகீழாகியிருக்கிறது. அதாவது ட்ராக்கிங் என்பதை வதை (சித்திரவதை) என்ற சொற் பிரயோகத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
பல்கலைக்கழகம் செல்லும் வரை ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் இருக் கும் ஒரு சில மாணவர்கள் வளாகத்தினுள் கால் பதித்ததும் முழுமையாக மாறிவிடுவதோடு, தன்னிலை மறந்து செயற்படுகின்றனரென்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே இந்த நாட்டின் எதிர்காலத்தை கையிலெடுக்கும் மாணவச் சமூகம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எலிக்கு மரணம், பூனைக்கு விளையாட்டு என்ற நிலையில் நடந்து கொள்வது நல்லதல்ல.
மாணவி தற்கொலை செய்து கொண்டாலும், மாணவர்களின் தவறான நடத் தையால் அந்த உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதென்பதே எமது நிலைப்பாடு, இந்த மாணவியின் தலைவிதி இதுதான் என்று கூறிக் கொண்டு அநீதிகளுக்கு உடந்தையாகவும் இருந்து விட முடியாது. ‘தலைவிதி’ எனும் வார்த்தை நாம் நமக்குக் கூறும் சமாளிப்புக்கள் மட்டும்தான்.
0 comments:
Post a Comment