லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இலங்கை யின் 21 வது இராணுவத் தளபதியாக இன்று உத்தியோக பூர்வமாக கடமை களை பொறுப்பேற்கவுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ வாகன பவனியாக அழைத்து வரப்படும் புதிய இராணுவத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் விசேட இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை, ஓய்வுபெற்றுச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கான பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நேற்று முன்தினம் காலை பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இராணுவத் தளபதி பதவிக்கு உரித்தான வாளை ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ள லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்தடி சில்வாவிடம் கையளிக்கவுள்ளார். மரியாதை அணி வகுப்பு நடைபெறும் மைதானத்தில் வைத்தே இது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இவ்வாறு சகல இராணுவ உயர் அதிகாரிகளின் முன்னிலையில் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்று மைதானத்தில் வைத்து கையளிக்கப்படுகின்றமை இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அத்துடன் இராணுவ தளபதி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தனது புகைப்படத்தையும் ஜெனரல் தயா ரத்நாயக்க திரைநீக்கம் செய்து வைத்தார்.
இதேவேளை, ஓய்வுபெற்றுச் சென்ற இராணுவத் தளபதியான தயா ரத்நாயகவுக்கு மரியாதை நிமிர்த்தம் “லெப்டினன்ட் ஜெனரல்” தரத்திலிருந்து ‘ஜெனரலாக” தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment