இரண்டாவது அமர்வு கூட்டம் ஏப்ரல் மாதம் 20ந் திகதி தொடங்கி மே மாதம் 8ந் திகதி வரை நடைபெறும். இதில் 19 நாட்கள் அவை அலுவல்கள் நடைபெறும். இன்று தொடங்கும் முதல் அமர்வில் பட்nஜட்கள் தாக்கல் செய்யப்படும். அதன்படி வரும் 26ந் திகதி ரயில்வே பட்nஜட் தாக்கல் செய்யப்படும்.
27ந் திகதி பாராளுமன்றத்தில் பொரு ளாதார ஆய்வறிக்கை தாக்கலா கும். மறுநாள் 28ந திகதி பொது பட்nஜட்டை மத்திய நிதி மந்திரி அருண் Nஜட்லி தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு பாராளுமன்றத்தில் வழக்கமான அலு வல்கள் நடைபெறும். அப்போது நிதித்துறை மற் றும் சட்டத்துறை உட்;பட பல்வேறு துறைகளின் 44 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 6 அவசர சட்டங்களுக்கு இந்த கூட்டத் தொடரில் மத்திய அரசு அவசியம் ஒப்புதல் பெற வேண்டும். நிலக்கரி சுரங்க ஏலம் விடுதல், நிலம் கையகப் படுத்துதல் சட்டத்திருத்தம், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட இந்த 6 அவசர சட்டங்களுக்கும் மாற்றாக சட்ட மசோதாக்கள் தாக் கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறாவிட்டால் அந்த 6 சட்டங்களும் காலாவதியாகி விடும்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அவசரச் சட்டங்களில் சிலவற்றை எதிர்த்து வருகின்றன. பாராளு மன்ற மேல் சபையில் எதிர்க்கட்சிகளே அதிகம் உள்ளதால் அவசர சட்டங்களை எளி தாக திட்டமிட்டபடி நிறைவேற்ற முடியுமா என்பதில் சிக்கல் உள்ளது.
எனவே இந்த பட்nஜட் கூட்டத் தொட ரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் பட்சத்தில் பெரும்புயல் வீசக்கூடும். குறிப்பாக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் 'பெரும்பான்மை விவசாயிகளின் ஒப் புதல் தேவை' என்ற வாசகத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப உள்ளன. இதுதவிர மத்திய அரசு அலுவலகங்களில் நடந்த ஆவண திருட்டு மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் இந்து மதம் பற்றி பேசும் கருத்துக்கள் போன்றவை யும் பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே பட்nஜட் கூட்டத்தொடர் அமைதியாக நடைபெறுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment