பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நால்வரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன் மேற்படி சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் பிபிலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இம்முறைப்பாட்டையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே அச்சிறுமி பிபிலை விடுதியொன்றிலிருந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது குறித்த சிறுமி பிபிலை அரசினர் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டமை மருத்துமனையினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து விடுதி உரிமையாளர் ஆட்டோ சாரதி திருமணமான இருவர் உள்ளிட்ட நால்வரை பிபிலைப் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment