மெல்போர்னில் இன்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவும் இந்தியாவும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களைக் குவித்தது. இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் தவான் ஆகியோர் இந்திய அணிக்கு ஓட்டங்களை சேர்த்தனர்.
இந்தியா 27.1 ஓவரில் 136 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஷிகர் தவான் சதம் கடந்தார். தவானுக்கு பக்கபலமாக நின்று ரகானேவும் நிதனாமாக ஆடினார்.உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை தவான் பதிவு செய்துள்ளார். டோனி சற்று அதிரடியாக ஆடி 18 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
308 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பிளிசிஸ் 55 ஓட்டங்களை எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது சமி, மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
உலகக் கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் இந்திய அணி பெறும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக தவான் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment