கிழக்கு மாகாண சபையில் அமைச்சரவையை ஏற்படுத்துவதில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சர்வகட்சிகளையும் கொண்ட தேசிய அமைச்சரவை உருவாக்கப்படுமென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஐ.ம.சு. முன்னணிக்கும் முஸ்லிம் காங் கிரஸ¤க்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நkர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அமைச்சரவையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை மு.கா. தலைமையும் முதலமைச்சரும் மேற்கொண்டிருந்தனர். இதற்கமைய, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சுப் பொறுப்புக்கள் இரண்டை கூட்டமைப்புக்கு வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் மு.கா. ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுவதாக ஐ.ம.சு.மு. குற்றம்சாட்டியுள்ளது.
மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பாக சனிக்கிழமை (21) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையி லேயே மேற்கண்டவாறு கூறினார்.
மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தில் கிழக்கு மாகாண சபையை அமைப்பது தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்ட போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டு அமைச்சுகள் வழங்க வேண்டு மென ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட் டுள்ளது.
இவ் ஒப்பந்தம் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மழுங்கடிக்கப் பட்டு வேறு வடிவில் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சித் தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 14 மாகாண சபை உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 06 உறுப்பினர் களும் இணைந்து சத்தியக் கடதாசி ஊடாக வழங்கிய ஆதரவு காரணமாக கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் பதவி ஏற்றுள்ளார். இவர் மீதான நம்பிக்கையை தாங்கள் இழந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபை அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட்
கிழக்கு மாகாணத்தின் அமைச்சுப் பதவிகள் கட்சித் தலைவர்களினாலே தீர்மானிக்கப்படுமே ஒழிய முதலமைச்ச ரினால் அல்ல என்று மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தெரிவித்தார்.
மாகாண முதலமைச்சராக தான் செயற்பட்டாலும் கட்சித் தலைவர்களே இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டுமெனவும் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொடுப்பதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று அவர் கூறினார்.
கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் வினவிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய அரசின் கூட்டு அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும் பிரதிபலிக்க வேண்டுமென்பதற்காகவே சகல கட்சிகளும் ஒன்றிணைந்து கிழக்கில் ஆட்சியமைக்க முன்வந்தன. கட்சித் தலைவர்களினாலே கிழக்கின் முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சேர்ந்து நடத்துகின்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் கிழக்கு மாகாணத்தின் அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இவர்களிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால கடந்தவாரம் இந்தியா சென்றிருந்தார். ஆகவே, இன்று அல்லது நாளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை சந்திப்பார். இதன் பின்னர் கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை முடிவு செய்யப்படும்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிலர் கட்சிக்கு எதிராக செயற்பட்டு நல்லாட்சியை குழப்புவதற்காக கிழக்கில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இது ஜனாதிபதிக்கு எதிராகவும் நாட்டில் நல்லாட்சிக்கு எதிராகவும் செய்யப்பட்ட வேலையாகும்.
ஆகவே, கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் அமைச்சரவைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் நம்பிக்கை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment