விமல் வீரவன்சவின் மனைவி கைது

கடவுச்சீட்டு மோசடி விசாரணைகள் பூர்த்தி

சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்தி ருந்தாரென்ற குற்றச்சாட்டிற்கான அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். மாலபேயில் உள்ள தனியார் மருத்துவமனை யொன்றில் வைத்தே நேற்றிரவு இவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

போலி ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பில் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணைகள் யாவும் முழுமையடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வீரவன்சவின் மனைவி சi உதயந்தி வீரவன்ச பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இவரிடம் கடவுச்சீட்டில் செய்யப்பட்ட மோச டிகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அவர் மேலும் கூறினார்.

தனது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னர் கருத்து தெரிவித்திருந்த விமல் வீரவன்ச, இது ஒரு அரசியல் பழிவாங்கல் என கூறியிருந்தார்.

முன்னாள் அமைச்சரின் மனைவி போலி கடவுச்சீட்டு வைத்திருப்பது தெரிய வந்த போதும் அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க காத்திருந்ததனாலேயே கைது செய்வதற்கு தாமதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளிப்பதற்குத் தயாராகவே இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு ஆதரவாக நுகேகொடவில் நடைபெற்ற மக்கள் பேரணி வெற்றி யடைந்திருப்பதால், அதில் பங்குதாரராக விருந்த விமல் வீரவன்ச மீது சேறுபூசும் வகையில் அவருடைய மனைவி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முசம்மில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

நுகேகொட மக்கள் பேரணி வெற்றி யளித்திருப்பதால் அன்றையதினம் இரவே கட்சித் தலைமையகத்தில் விமல் வீரவன்சவின் மனைவியைத் தேடி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தேடுதல் நடத்தினர். பின்னர் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற சமயம் அவர் சுக வீனமுற்றிருந்தார். சுகமடைந்ததும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து வாக்குமூலம் அளிப்பதாகக் கூறியிருந்தார்.

எனினும், கடும் சுகவீனமுற்ற அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் வைத்தியசாலை யிலிருந்து வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என்பதையும் திருமதி விமல் வீரவன்ச தனது வழக்கறிஞர் மூலம் குற்றுப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்திருந்தார். வைத்தியசாலையி லிருந்து வெளியேறியதும் வாக்குமூலம் வழங்க அவர் தயாராக இருப்பதாக நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் முசம்மில் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் விமல் வீரவன்சவின் தொலைபேசி, அவர் அணியும் சேட் தொடர்பில் சேறு பூசப்பட்டது. தற்பொழுது அவருடைய மனைவிக்கு எதிராக சேறுபூசும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment