சமுர்த்தி, திவிநெகும துறைகளில் பணிபுரியும் 8368 ஊழியர்களின் ஊழியர் சேமஇலாப நிதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து ள்ளதாக வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அறி வித்துள்ளார். இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை நிறுத்தி, தேர்தல் நடவடிக்கைகளுக்கும் ஆடம்பர நிகழ்வுகளுக்கும் இந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் சுட்டிக் காட்டுகிறார். இதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய்களை கடந்த ஆட்சியாளர்கள் சூறையாடி இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது.
சமுர்த்தி, திவிநெகும போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முழுக்க முழுக்க இந்த நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே இலக்காகக் கொண்டிருக்கும். இதன் மூலம் மனைப்பொருளாதாரமும் கிராமியப் பொருளாதாரமும் ஓரளவு வளர்ச்சி கண்டதென்பதை நாம் மறுக்க முடியாது. இந்தத் திட்டங்கள் மூலம் கிராமியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் ஏற்றம், தேசிய பொருளாதாரத்திலும் உயர் வளர்ச்சியை ஏற்படுத்தியது.
என்றாலும், இந்த வளர்ச்சியின் பிரதிபலன்கள் மக்களையும் நாட்டையும் முழுமையாகச் சென்றடையாத நிலையையே கடந்தகால ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி உதவி பெறுவோர் 14 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இதேபோல திவிநெகும - வாழ்வின் எழுச்சித் திட்டத்திலும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களும் பல்வேறு வகைகளில் நிவாரணங்கள் பெறுவதற்கு உரித்துடையவர்களாக இருக்கின்றனர்.
இத்தகைய குடும்பங்களை பராமரிப்பதற்கும் அவர்க ளுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கும் சுமார் 25 ஆயிரம் அதி காரிகள் களப்பணிகளிலே ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான ஊழியர் சேமஇலாப நிதியத்தையே கடந்த அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சமுர்த்தி, திவிநெகும உட்பட பல்வேறு பொருளாதார சுபிட்சத் திட்டங்கள் முன்னைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டன. அந்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்தவர் அப் போதைய ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவின் சகோதரரான பசில் ராஜபக்ஷ.
இவரின் கீழ் இருந்த இந்தத் திணைக்களங்களின் நிதிகளே தவறான முறைகளில் கையாளப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிரு க்கிறது. சமுர்த்தி, திவிநெகும திணைக்களங்களின் கீழ் பணிபுரியும் இந்த அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளின் ஊழியர் சேமலாப நிதியை இல்லா தொழிக்கவே கடந்தகால அரசாங்கம் முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்களுக்குச் சேரவேண்டிய சுமார் 70,000 இட்சம் ரூபாவை மீளப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறதென்பது உண்மையாகும்.
என்றாலும் பசில் ராஜபக்ஷவின் கீழ் செயல்பட்ட இந்தத் திணைக்களங்களின் நிதிக்கு என்ன நடந்தது? இவர்களுக்குரிய சேமலாப நிதிகளை உரிய முறையில் செலுத்தாமல் தவிர்க்கப்பட்டது ஏன்? என்ற கேள்விகள் இப்போது பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன.இதேபோல, அரசியல் அதிகாரங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களின் பின் புலத்தோடு கூடிய தற்துணிவுகளைப் பயன்படுத்தி கடந்த ஆட்சிக் காலத் தில் பல்வேறு மோசடிகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றிருப்பது ஒவ்வொரு அமைச்சுக்களின் விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கிறது. அப்பாவி மக்களின் பணத்தை அபகரிப்பது அல்லது மோசடியாக எடுப்பது என்பது மிக மோசமானதும் கேவலமானதுமான நடவடிக்கையாகும்.
கடந்த அரசாங்க காலத்தில் திவிநெகும மாநாட்டை நடத்துவதற்கு 630 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்பட்டி ருக்கின்ற இந்த நிதி அப்பாவி சமுர்த்தி உதவி பெறுவோரின் பணத்திலிருந்தே சூறையாடப்பட்டிருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறுகின்றார். ஒரு நாளில் நடத்தப்படும் இந்தக் கூத்துக்கு இவ்வளவு பணம் செலவிடப்பட்டு வீண் விரயம் செய்யப்பட்டிருக்கிறதென்பது மிகவும் கவலைக்குரியதாகும். இது மாத்திரமல்ல, கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரசாரப் பணிகளுக்கும், பிரசார அச்சுப் பதிப்புக்களுக்குமென சுமார் 50 இலட்சம் ரூபாவை கடந்த அரசாங்கம் செலவிட்டுள்ளது. இதுவும் சமுர்த்தி. திவிநெகும பெறும் அப்பாவி மக்களின் பணத்தி லிருந்தே செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அப்பாவி மக்களின் பணம் மிக மோசமாகச் சூறையாடப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியாளர்கள் மோசடிகளிலும் சுரண்டல்களிலுமே அரசியலை நடத்தி வந்திருக் கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு விடயமும் சான்றாக அமைந்திருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பு அரசாங்க ஊழியர்களுக்கென 2500 ரூபா வழங்கப்பட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இதற்கான முழுத் தொகை திறைசேரியில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். அல்லது திறைசேரி வழங்கியிருக்க வேண்டும். அதற்கான பதிவுகள் இல்லையென அமைச்சர் சஜித் கூறுகிறார். ஜனாதிபதியின் (அப்போதைய) விசேட அறிவுறுத்தலின் கீழ் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காக 29,000 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையும் சமுர்த்தியாளர்களின் பணத்திலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சமுர்த்தியாளர்களுக்கு மேலும் மேலும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதையே நாம் காணமுடிகிறது. ஆகவே அரசியலுக்காக அப்பாவிகளின் வாழ்க்கையோடு விளையாடும் கலாசாரம் இனிமேலும் தொடர அனுமதிக்கக் கூடாது. மக்களின் பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பவென உருவாக்கப்பட்ட சமுர்த்தி, திவிநெகும போன்ற திட்டங்களை உருவாக்கிய அன்றைய அரசாங்கமே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றதென்பது பெரும் வேதனைக்குரியது.
இந்த விடயத்தில் இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் அரசாங்க அதிகாரிகள் அரசியல் கைக்கூலிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறான நிலை இனிமேலும் தொடர இடமளிக்கக் கூடாது. அரச அதிகாரிகள் தங்களது பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்க வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் அவர்கள் கண்ணியமும் கெளரவமும் பேணப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் நல்லாட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
0 comments:
Post a Comment