100 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து - 14 பேர் காயம்

மஸ்கெலியா - பிரவுண்லோ பகுதியில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அண்மையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுங்காயமடைந்து  மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று மாலை  3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பகுதியிலிருந்து சிவனொலிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே குறித்த வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment