பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி : போராடி தோற்றது சிம்பாப்வே

சிம்­பாப்வே அணி­யு­ட­னான நேற்­றைய போட்­டியில் பாகிஸ்தான் அணி பெரும்­பா­டு­பட்டு 20 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது. தொடர் தோல்­வி­களை சந்­தித்­து­வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி சற்று ஆறுதல் அளித்­துள்­ளது.
அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரிஸ்பேன் நகரில், நேற்று நடந்த உலக்­கிண்­ணத்­திற்­கான 'பி' பிரிவு லீக் போட்­டியில், சிம்­பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்­தப்­போட்­டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இறு­தி­வரை போரா­டிய சிம்­பாப்வே அணியின் போராட்­டம்­மிக்க அந்த ஆட்டம் வர­வேற்­கத்­தக்­க­தா­க விளங்­கி­யது.

இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கிய நசிர் அக­மது 1 ஓட்­டத்­து­டனும்இ அக­மது ஷேசாத் ஓட்­ட­மேதும் பெறாத நிலை­யிலும் ஆட்­ட­மி­ழந்து மோச­மா­ன­தொரு ஆரம்­பத்தைக் கொடுத்­தனர். பின் இணைந்த ஹாரிஸ் சோகைல்இ மிஸ்பா ஜோடி நிதா­ன­மாக ஓட்­டங்­களைச் சேர்த்­தது. மூன்­றா­வது விக்­கெட்­டுக்கு 54 ஓட்­டங்­களைச் சேர்த்த போது ஹாரிஸ் சோகைல் 27 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.
பொறுப்­பாக ஆடிய மிஸ்பா 73 ஓட்­டங்­களைப் பெற்றார். உமர் அக்மல் 33 ஓட்­டங்­களைப் பெற்று ஆறுதல் தந்தார். அடுத்து வந்த அப்­ரிடி ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் வந்த வேகத்­தி­லேயே பெவி­லியன் திரும்­பினார். வகாப் ரியாஸ் 54 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்­காமல் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்­கெட்­டு­க­ளுக்கு 235 ஓட்­டங்­களைப் பெற்­றது. சிம்­பாப்வே சார்பில் சட்­டாரா 3, சீன் வில்­லியம்ஸ் 2 விக்­கெட்­டுகள் வீழ்த்­தினர்.

236 என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய சிம்­பாப்வே அணி இறு­தி­வரைப் போரா­டியும் பல­ன­ளிக்­காத நிலையில் 20 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

சிம்­பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக கள­மி­றங்­கிய பன்­யங்­கார 9 ஓட்­டங்­க­ளு­டனும், சிக்­கண்டர் 8 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்து, ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்கள் ஏமாற்ற, அடுத்து களம் புகுந்த டெய்லர் 50 ஓட்­டங்­களை விளா­சினார்.

வில்­லியம்ஸ் 33 ஓட்­டங்­க­ளையும், சிக்­கும்­புரா 35 ஓட்­டங்­க­ளையும், மச­கட்ஸா 29 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். பந்­து­வீச்சில் மொஹமட் இர்பான் மற்றும் ரியாஸ் ஆகியோர் சிறப்­பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment