வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி இன்று உண்ணாவிரதம்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார்.

யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிமுதல் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

வடபகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்து காணாமல் போனவர்கள், உட்பட மீள்குடியேற்றம் போன்றவற்றினை வலியுறுத்தி இவர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வடபகுதியில் காணாமல் போனவர்களின் 
பெற்றோர்கள், உறவினர்கள், உட்பட தாய்மார்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
அனந்தி சசிதரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மேற்கூறிய விடயங்களை நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment