இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமைக்காகவே மேற்படி நால்வருக்கும் தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.திக்றித் நகரைக் கைப்பற்ற அந்நாட்டு அரசாங்கம் 30,000 படையினரை உள்ளடக்கி இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம் பித்த தினத்திலேயே இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கொல்லப்பட்ட நால்வரும் திக்றித் பிராந்தியத்திற்கு வடக்கேயுள்ள நகரொன்றைச் சேர்ந்தவர்கள் என அந்த வீடியோ காட்சியில் விபரிக்கப்பட்டுள்ளது.அந்த வீடியோ காட்சியில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னர் 'சஷ்வத் அல்--அலாம் அமைப்பிலிருந்து நீக்கம்' என்ற பதாகையொன்று காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து முகமூடியணிந்த தீவிரவாதிகளால் அந்த நால்வரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment