19 ஐ எதிர்த்த வீரசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற போது அச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மேற்படி 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த நிலையில், அது தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், சரத் வீரசேகர எம்.பி மாத்திரம், சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். 

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க  கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment