திருத்தம் இல்லையென்றால் 19வது திருத்தம் 'வெள்ளைப்பூ மலர்வளையம்'


திருத்தம் இல்லையென்றால் 19வது திருத்தம் 'வெள்ளைப்பூ மலர்வளையம்'19வது திருத்தச் சட்டத்தை மாதுலுவாவே சோபித்த தேரர் வெள்ளைப் பூச்சரம் என்று கூறியபோதும் அதில் திருத்தங்கள் கொண்டுவராமல் இருந்திருந்தால் அது ´வெள்ளைப்பூ மலர்வளையம்´ ஆகியிருக்கும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

இது நாட்டுப்பற்று, சமூகத் தொண்டு என்ற பதங்கள் கொண்டு மூடப்பட்டிருந்ததாக கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேரர் குறிப்பிட்டார். 

ஜனநாயக விரோத போக்கு காணப்பட்டதாலேயே தான் உள்ளிட்ட சில தேரர்கள் 19வது திருத்தச் சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வந்ததாக அவர் கூறினார். 

சுயாதீன ஆணைக்குழு பாராளுமன்றுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை என்ற விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் 10% அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கவென முழு நாட்டு மக்களும் வரி செலத்த நேரிட்டுள்ளதாக மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment