பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும் வரை மஹிந்த தரப்பினர் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை சுதந்திரக் கட்சி அறிவித்தவுடன் மஹிந்த தரப்பினர் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பது என் றும் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான உறுப்பினர்கள் 37 பேர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விஷேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.
மெதமுலனவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எதிர்வரும் பொதுத் தேர்தல், பிரதமர் வேட்பாளர், எதிர்க் கட்சித் தலைவர் விவகாரம், மே தின கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக ஆரயப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதை தவிர்த்து கை சின்னத்தை பாதுகாத்து அதன் கீழ் ஒரே கூட்டமைப்பாக போட்டியிடுவது குறித்து இதன் போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் இதன் போது முன்னாள் ஜனாதிபதியுடன் தமது விவகாரம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் சிறு கட்சிகளின் தலைவர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ உள்ளிட்டோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட்யுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசாங்கத்தின் அமைச்சருமான மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாசுதேவ நாணயக் கார, குமார வெல்கம, தினேஷ் குணவர்தன, டீ.பீ.ஏகநாயக்க, அருந்திக பெர்ணான்டோ, லக்ஷ்மன் வசந்த பெரேரா, சரத் வீரசேகர, சாலிந்த திஸாநாயக்க, மஹிந்தானத்த அளுத் கமகே, ஜயந்த கெட்டகொட, காமினி லொக்குகே, விமல் வீரவன்ச, ரஞ்சித் சொய்ஸா, சாமிக புத்ததாச, நாமல் ராஜபக்ஷ, டலஸ் அலகப்பெரும, சஜின் வாஸ் குணவர்தன, ரொஹான் ரத்வத்த, ஜீ.எல்.பீரிஸ், எஸ்.எம்.சந்திரசேன, மொஹான் டீ சில்வா, தேனுக விதான கமகே, நிசாந்த முதுஹெட்டிகம, ஹெஹலிய ரம்புக்வெல்ல, கீதாஞ்சன குணவர்தன, ஸ்ரீயானி விஜே விக்ரம உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே நேற்று இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
புது வருடத்தில் சந்தித்து பேச்சு நடத்தும் நோக்கிலேயே நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கால்டன் இல்லத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கஇ உதய கம்மன்பில உள்ளிட்ட மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களென சுமார் 100 பேர் வரையில் கூடியிருந்தனர்.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரைக் சந்திக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலமையின் கீழ் புதிய கூட்டணி அரசியல் கட்சியொன்று தயாராகிவருவதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பற்றுள்.ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களுடன் தனியாக சந்திப்பினை மஹிந்த ராஜபக்ஷ நடத்தியுள்ளார். இதன் போது இந்த நீக்கத்துக்கு எதிராக உறுப்பினர்கள் நீதிமன்றை நாடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment