சோமவன்சவை தடுக்க, ஜே.வி.பி பிரயத்தனம்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவன்ச அமரசிங்கவை மீண்டும் கட்சிக்குள் இணைந்துகொள்வதற்கு தேவையான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்  அரசியல் சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

கட்சியில் தான் வகித்த சகல பதவிகளிலிருந்தும் நேற்று வியாழக்கிழமை இராஜினாமா செய்த சோமவன்ச அமரசிங்க, புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்.

இந்நிலையில், கட்சி தொடர்பில் கிளம்பியுள்ள வதந்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment